பேராசிரியர் நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை - காவல்துறை விசாரணை

First Published May 9, 2018, 1:00 PM IST
Highlights
Theft in professor nirmala devi home


தான் வேலைபார்க்கும் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசி  அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம்  பாலியல் பேரம் பேசிய ஆடியோ கடந்த மாதம் வெளியானது இதனையொட்டி கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார் நிர்மலா தேவி.

பதினைந்து நாள் காவல்துறை விசாரணை முடிந்து இன்று விருதுநகர் நீதிமன்றத்திற்கு ஆஜர் செய்யப்பட்டார் நிர்மலாதேவி. நிர்மலாதேவியை விசாரிக்க சந்தானம் தலைமையில் ஆளுநர் அமைத்த குழுவிற்கு எவ்விதம் தடையுமில்லையென மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவரது வீடு அருப்புக்கோட்டை அருகே உள்ள காவியா நகரில் உள்ளது. அவரது வீட்டிற்கு காவல்துறை சீல் வைத்து பூட்டியது. இந்நிலையில் இன்று சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டு உடைபட்டுள்ளதை அறிந்து நிர்மலா தேவியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அங்குள்ள ஆவணங்களை திருடும் முயற்சி நடைபெற்றுள்ளாதா? அல்லது பணம், நகைகான கொள்ளை முயற்சியா? என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

click me!