விமானத்தின் கழிவறையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள்.. எங்கு..? எப்போது..?

By Thanalakshmi VFirst Published Sep 16, 2022, 11:37 AM IST
Highlights

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து இன்று காலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் கழிவறையிலிருந்து ரூ.1.65 கோடி மதிப்புடைய 3.730 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து இன்று காலை சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் கழிவறையிலிருந்து ரூ.1.65 கோடி மதிப்புடைய 3.730 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இன்று அதிகாலை துபாயிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து, டெல்லிக்கு புறப்பட்டு செல்லும். அதனால் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்க:ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் அமைச்சர்களின் கமிஷன்.? ஒன்றரை ஆண்டில் 50ஆயிரம் கோடி கொள்ளை- எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

அப்போது விமானத்தின் கழிவறையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்த்த ஊழியர்கள், விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பாதுகாப்பு படையினரும் மற்றும் சுங்கத்துறையினரும் அந்த பார்சலை எடுத்து, மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்ததில், அதில் வெடி மருந்துகள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் பார்சலை பிரித்து பார்த்தபோது, அதற்குள் ரூ.1.65 கோடி மதிப்புள்ள 3.7 கிலோ எடையுள்ள 32 தங்கக் கட்டிகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமானத்தில் மற்றும் விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.தங்கக் கட்டிகளை கடத்தி வந்து, விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, தப்பி ஓடிய நபரை சுங்க அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க:மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுசின்னம்...! மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய திமுக.. அதிர்ச்சியில் பாஜக

click me!