ரொம்ப கவனம்….இந்த 3 மாவட்டங்களில் இன்னிக்கு மழை பிச்சுக்கிட்டு கொட்டும்… வானிலை மையம் அலர்ட்

Published : Sep 28, 2021, 08:56 AM IST
ரொம்ப கவனம்….இந்த 3 மாவட்டங்களில் இன்னிக்கு மழை பிச்சுக்கிட்டு கொட்டும்… வானிலை மையம் அலர்ட்

சுருக்கம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. வேலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந் நிலையில் இன்று நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து கூறி இருப்பதாவது: கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளைய தினம் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை கொட்டும்.

வரும் 31ம் தேதி வட உள்மாவட்டங்களிலும், அக்டோபர் 1ம் தேதி கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் விஜய்! டிச.16ல் கொங்கு மண்டலம் குலுங்கப் போகுது! செங்ஸ் போட்ட பிளான்
தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதி.. ஏன் என்னாச்சு?