இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5% இட ஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2012 வரை மற்ற மதங்களில் இருந்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாம் மத்திற்கு மாறினால், ஏற்கனவே அவர்களிடம் இருக்கும் சாதிச்சான்றிழ்கள் மாற்றப்பட்டு புதிய சாதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த புதிய சாதி சான்றிதழில் முஸ்லீம் ராவுத்தர் அல்லது லப்பை என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன்படி பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் என கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் 2012-ம் ஆண்டுக்கு பிறகு மதம் மாறிய முஸ்லீம்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே முஸ்லீமகாக மாறிய பிசி, எம்.பிசி, எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினராக கருதி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
காங்கிரஸுக்கு ஏன் 10? விசிகவுக்கு மட்டும் 2.. விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்த திருமாவளவன் ..
இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் “ இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முஸ்லீம்களாக கருத உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5% இட ஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல் பிசிஎம் என்று சாதி சான்றிதழ் வழங்கும் போது உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.