நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறையில் வேலை:நாளை தான் கடைசி தேதி!

By Manikanda Prabu  |  First Published Mar 11, 2024, 11:21 AM IST

தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி தேதி


தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள 2,455 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், வரைவாளர், சூப்பர்வைசர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 1,933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி வெளியானது. இது தொடர்பான அறிவிப்பில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், இந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,455ஆக உயர்த்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தேர்வு முறை எப்படி?


தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் எழுத்துத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதார்ர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

கல்வித்தகுதி மற்றும் ஊதியம்


இன்ஜினியரிங் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள், இளங்கலை அறிவியல் என பணிக்கேற்ப கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பணிக்கான தகுதிக்கேற்ப ரூ.18200 முதல் ரூ.138500 வர நிர்ணையிக்கப்பட்டுள்ளது. துறை வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம், எழுத்துதேர்வுககன பாடத்திட்டம், முழுமையாக கல்வி தகுதி, வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை https://tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

click me!