2026 ஆம் ஆண்டில் தமிழகத்தின் சி.எம் எடப்பாடி.! அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள் இதோ

By Ajmal Khan  |  First Published Dec 15, 2024, 11:48 AM IST

 பெஞ்சல் புயல், சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நடைபெற்றப்பட்டுள்ளது


அதிமுக பொதுக்குழு தீர்மானம் :

  • முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திக் காட்டிய எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு
  • தமிழ்நாட்டில் மிகப்பெரிய பேரழிவு ஏற்படுத்திய பெஞ்சல் புயல் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம்
  • சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதை பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு மின்கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு பத்திரப்பதிவு உயர்வு என தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வரும் திமுக அரசுக்கு கண்டனம் 
  • திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் விவசாயிகள் மீனவர்கள் நெசவாளர்கள் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம்
  • மதுரையில் டங்ஸ்டன் தொடங்கும் அமைவதை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் சுரங்கம் அமைவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தல் 
  • திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசை வலியுறுத்தல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெற வேண்டும் , மத்திய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது கைவிட்டு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது தொடர வலியுறுத்தல் 
  • மக்கள் நலன்களை பின்னுக்குத் தள்ளி பார்முலா போர் கார் பந்தையம் நடத்தி அரசு நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் 
  • அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட குடிமராமத்து திட்டம் ஏரி குளங்கள் ஆழப்படுத்தும் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்த தவறியதற்கு கண்டனம் 
  • கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு பாண்டியாரு புன்னம்புழா ஆகிய திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம் 
  • நீட் தேர்வு விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் திமுக அரசுக்கு கண்டனம் 
  • வாக்காளர் சேர்க்கை நீக்குதல் போன்றவற்றில் குளறுபடிகள் நிலவுவதை சரி செய்திடவும் தேர்தல் நியாயமாகவும் நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தல் 
  • கல்வி பொருளாதாரம் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில் சாதி வாரி கணக்கெடுக்கும் நடத்த திமுக அரசுக்கு வலியுறுத்தல் 
  • சிறுபான்மையினர் நலன் காக்க அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்திய திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு வலியுறுத்தல்..
  •  20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யயாத வேண்டும் திமுக அரசுக்கு கண்டனம்.
  •  பட்டியல் இன மக்களின் உரிமைகளை காப்பாற்றவும் பாதுகாக்கவும் தவறு தவறிய திமுக அரசுக்கு கண்டனம் 
  • கல்வியை மீண்டும் பொது பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியில் சேர்க்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு வலியுறுத்தல் 
  • தமிழ்நாட்டிற்கு நிதி பகிர்வினை பாரபட்சம் இல்லாமல் வழங்கிட மத்திய அரசுக்கு வலியுறுத்தல் 

2026 இல் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு முதலமைச்சராகவும் என சூளுரை

click me!