மட்டன் பிரியாணி, சிக்கன் 65 முதல் தம்ரூட் அல்வா வரை.! களைகட்டும் அதிமுக பொதுக்குழு உணவு பட்டியல்

By Ajmal Khan  |  First Published Dec 15, 2024, 10:45 AM IST

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம், புதிய நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தொண்டர்களுக்கு விருந்தளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.


அதிமுக அதிகார மோதல்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை இன்னும் சரி செய்ய முடியாமல் திணறி வருகிறது அதிமுக, தலைமை இடத்தை பிடிக்க நடைபெற்ற போட்டியால் பல பிளவுகளாக பிரிந்து கிடக்கிறது. நாங்கள் தான் உண்மையான அதிமுக என ஒவ்வொரு தலைவர்களும் கூறி வருகிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் வாக்குகள் பிரிந்து தோல்வியே பரிசாக கிடைத்து வருகிறது.

Tap to resize

Latest Videos

அந்த வகையில்  தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. பிரிந்து சென்ற தலைவர்கள் ஒன்றினைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை கூறி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியோ அதற்கான வாய்ப்பு இல்லையென அடித்து கூறிவிட்டார். 

undefined

தொடங்கிய பொதுக்குழு கூட்டம்

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டு வருகிறது. திமுக கூட்டணிக்கு இணையாக அதிமுகவும் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க ஆயத்தமாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரகத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் ஹுசேன் தலைமையில் இன்று காலை தொடங்கியுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைப்பு கடிதத்துடன் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். 


இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதை பொருட்கள் புழக்கம், விலைவாசி மற்றும் வரிகள் உயர்வு, மாநிலத்துக்கான நிதி பகிர்வு, உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிமுக பொதுக்குழுவிற்கு வரும் தொண்டர்களுக்கு விருந்தளிக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் அசைவம், சவைம் என பலவகைகளிலும் உணவுகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. 


அதிமுக பொதுக்குழு உணவு பட்டியல்


அதிமுக செயற்குழு - பொதுக்குழு மதிய உணவு 

750 பேருக்கு சைவ உணவு 

தம்ரூட் அல்வா
பருப்பு வடை
அப்பளம்
ஊறுகாய்
மோர் மிளகாய்
சாம்பார் 
வத்தக் குழம்பு
தக்காளி ரசம்
முட்டைகோஸ் + பீன்ஸ் பொறியல்
புடலங்காய் கூட்டு
வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
வெள்ளை சாதம்
உருளைக்கிழங்கு பொறியல்
தயிர்
பருப்பு பாயாசம் 


6000 பேருக்கு அசைவம்

மட்டன் பிரியானி
சிக்கன் 65
மீன் வறுவல்
முட்டை மசாலா
வெள்ளை சாதம்
ரசம் 
தயிறு

click me!