தென்காசி மாவட்டம் செங்கோட்டை பிரபல பார்டர் ரஹ்மத் புரோட்டா கடை குடோனுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி அதிகாரிகள் செய்த சோதனையில் பூட்டப்பட்ட அறை ஒன்றின் பூட்டை உடைக்கப்பட்டு சோதனை 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் பார்டர் பரோட்டா
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ரஹ்மத் புரோட்டா கடையில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகார் எழுந்ததையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள முயற்சி செய்தனர்.அப்பொழுது, ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றதால், உணவுப் பொருட்கள் தேக்கி வைக்கப்படும் குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்தனர்.இதனையடுத்து ஊழியர்கள் கடைக்கு வந்ததையடுத்து குடோனுக்கு வைக்கப்பட்ட சீலானது அகற்றப்பட்டு பொருட்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.
200 கிலோ இறைச்சி பறிமுதல்
அப்பொழுது, அந்த குடோனில் 4 மூட்டைகள் மிளகாய் வத்தல் இருந்த நிலையில், மிளகாய் வத்தல் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறி, மிளகாயை அழிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து மற்றொரு குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்தனர். அப்போது சுமார் 200 கிலோவுக்கும் மேலான இறைச்சி மனிதர்கள் பயன்பாட்டிற்கு உகந்தததாக இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கெட்டுப்போன இறைச்சி மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதனை பினாயில் ஊற்றி அழித்தனர்.
இதையும் படியுங்கள்
ஈரோடு தேர்தலுக்கு திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.! ஓட்டை இரட்டை இலைக்கு போடுங்கள்- இபிஎஸ்