படகுகளுடன் 19 தமிழக மீனவர்கள் கைது! தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!

By SG Balan  |  First Published Sep 14, 2023, 8:14 AM IST

19 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படி தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் தக்க தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

Tap to resize

Latest Videos

அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு; ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது!

ராமேசுவரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்து 13 தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் புதுக்கோட்டையைச் சேர்ந்த மேலும் 6 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்தனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களின் பெயர் உள்ளிட்ட பிற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. இதனிடையே, 19 மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

14 ஆயிரம் ரூபாய் கம்மியா கிடைக்கும் ஐபோன் 15! எங்கே, எப்படி வாங்கலாம்? முழு விவரம் இதோ!

click me!