IAS Officer Reshuffle: புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம்; வருவாய்துறைக்கு பி.அமுதா மாற்றம்!!

By Velmurugan sFirst Published Jul 16, 2024, 3:37 PM IST
Highlights

உள்துறை செயலராக இருந்த பி.அமுதா உட்பட தமிழகம் முழுவதும் மொத்தமாக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட மொத்தமாக 15 அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பள்ளிக்கல்வித்துறை செயலராக எஸ்.மதுமதி, சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.குமரகுருபரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிட்கோ மேலாண் இயக்குனராக இருந்த எஸ்.மதுமதி, பள்ளிக்கல்வித்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.கோபால் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறை செயலராகவும், உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ஹர்சகாய் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை செயலராகவும், தொழில்நுட்பக்கல்வி ஆணையர் கே.வீரராகவராவ் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

இது என்ன தமிழ்நாடா? இல்லை உத்திரபிரதேசமா? நிர்வாகியின் படுகொலையால் சீமான் உச்சக்கட்ட ஆவேசம்

தொழிலாளர், திறன்மேம்பாட்டுத்துறை செயலராக இருந்த குமார் ஜயந்த், தகவல் தொழில்நுட்பத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தீரஜ்குமார் உள்துறை செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த பி.அமுதா வருவாய்த்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த வி.ராஜாராமன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

30 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவன்; பேருந்து நிலையத்தில் சுத்துபோட்ட உறவினர்கள்

தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அதிகாரி எஸ்.சுரேஷ்குமார், பிசி, எம்பிசி, சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலராகவும், திருவண்ணாமலை டிஆர்டிஏ திட்ட அதிகாரி சி.ஏ.ரிஷப், நிதித்துறை துணை செயலராகவும், ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் பொதுத்துறை துணை செயலராகவும், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ்.வளர்மதி சமூக நலத்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

click me!