142 கோடி இந்தியர்களும் பிரதமர் மோடியின் குடும்பம்: லல்லுவுக்கு அண்ணாமலை பதில்

"நாட்டில் உள்ள 142 கோடி மக்களும் பிரதமரின் மோடியின் குடும்பத்தினர் தான். பிரதமர் மோடி தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்பணித்துளாளர். அவருக்கு இந்த நாடே அவரது குடும்பம்தான்" என அண்ணாமலை குறிப்பிட்டார்.


சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னைக்கு பிரதமர் மோடி இதற்கு முன் பல முறை வந்திருகிகறார். இந்த முறை தன்னுடைய குடும்பத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறாப். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்திருக்கிறார்" என்றார்.

Latest Videos

"பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை, தனிமனிதன் என்று சொல்கிறார். நாட்டில் உள்ள 142 கோடி மக்களும் பிரதமரின் மோடியின் குடும்பத்தினர் தான். பிரதமர் மோடி தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்பணித்துளாளர். அவருக்கு இந்த நாடே அவரது குடும்பம்தான்" எனக் குறிப்பிட்டார்.

வெள்ளத்தின் வந்தபோது மீடியா மேனேஜ்மெண்ட் செய்த திமுக: சென்னையில் பிரதமர் மோடி ஆவேசம்

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் - பாரதியார்
திமுக ஆட்சியின் நிலை
இன்று இதுதான் pic.twitter.com/sBmPyzCe7I

— Mangalasundari N-மோடியின் குடும்பம்🇮🇳 (@Mangalasundary)

"இவர்களுக்குக் குடும்பம் என்றாலே கோபாலபுரத்தில் இருக்கும் திமுகவின் குடும்பம்தான் தெரியும். பீகாரில் இருக்கும் லல்லு பிரசாத் யாதவின் குடும்பமும்தான் தெரியும்" என்றும் சாடினார்.

மேலும், "மோடியின் குடும்பம் நான்" என்று கூறுமாறு கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து அண்ணாலை கேட்டபோது, கூடியிருந்த தொண்டர் ஒருமித்த குரலில் திரும்பக் கூறி முழக்கமிட்டனர். வரும் மக்களவைத் தேர்தலில் வாரிசு அரசியல் செய்யும் திமுக உள்ளிட்ட கட்சிகளை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கோரிக்கை விடுத்தார்.

மத்திய அமைச்சர் எல்.முருகனும் நாட்டில் உள்ள 140 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம் என்று குறிப்பிட்டுப் பேசினார். அவரது பேச்சின்போது கூடியிருந்த பாஜக தொண்டர்கள் "மோடியின் குடும்பம் எங்கள் குடும்பம்" என்று கோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

அடேங்கப்பா... ஆனந்த் அம்பானி வாட்ச்சைப் பார்த்து வியந்த மார்க் ஜூக்கர்பெக், பிரிசில்லா!

click me!