14 வயது சிறுமிக்கு திருமணம்; தடுத்து நிறுத்திய கலெக்டர் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? 

 
Published : Jun 22, 2018, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
14 வயது சிறுமிக்கு திருமணம்; தடுத்து நிறுத்திய கலெக்டர் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா? 

சுருக்கம்

14 year old girl married stopped and what collector did

திருவாரூர்

திருவாரூரில் 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்தி நிறுத்தப்பட்ட பின்னர் அவர் கல்வியை தொடர தேவையான நடவடிக்கையை மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ். 

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோரின் முடிவின்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடக்க இருந்தது.  இதனை குழந்தை நல அமைப்பினர், சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

அதன்பின்னர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் நிர்மல்ராஜ், மாவட்ட நீதிபதி கலைமதி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது அந்த சிறுமிக்கு உரிய ஆலோசனை வழங்கிய ஆட்சியர் நிர்மல்ராஜ் கல்வி உபகரணங்களை வழங்கி, அந்த சிறுமி, கல்வியை தொடர நடவடிக்கை எடுத்தார். 

இந்தக் கூட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் உமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு உள்பட பலர் பங்கேற்று இருந்தனர்..  
 

PREV
click me!

Recommended Stories

நாளை வெள்ளிக்கிழமை அதுவுமா.. தமிழகத்தில் முக்கிய இடங்களில் 8 மணிநேரம் மின்தடை அறிவிப்பு!
கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!