ஆறு வயது சிறுமியை தரையில் அடித்துக் கொன்ற 14 வயது சிறுவன்; பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது கொலை...

 
Published : Feb 03, 2018, 06:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
ஆறு வயது சிறுமியை தரையில் அடித்துக் கொன்ற 14 வயது சிறுவன்; பலாத்காரம் செய்ய முயற்சித்தபோது கொலை...

சுருக்கம்

14-year-old boy killed six-year-old girl when attempted to rape ...

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பலாத்காரம் செய்ய முயன்றபோது சத்தமிட்டதால் ஆறு வயதுச் சிறுமியை தரையில் அடித்து கொன்றுவிட்டு, வீட்டுக்கு தீவைத்த 14 வயதுச் சிறுவனை காவலாளர்கள் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கீழ தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. கார் ஓட்டுநரான இவருக்கு ஆறு வயதில் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு மகள் இருக்கிறாள். அவள், அதப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார்.

லட்சுமி, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த நிலையில்,  வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. திடிரென தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து அங்கு மயங்கிக் கிடந்த லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர்.

ஆனால், அங்கு லட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தட்டப்பாறை காவலாளரளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன், லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அவர் சத்தமிட்டதால் தரையில் அடித்துக் கொன்றுவிட்டு, அதை மறைக்க வீட்டுக்குத் தீவைத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுவனை காவலாளார்கள் கைது செய்தனர்.  9-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், தந்தை இறந்ததால் அந்தச் சிறுவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாராம். இது தொடர்பாக காவலாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!