500 பெண்களுக்கு கருவை சிதைத்த டாக்டர்... பெண் கர்ப்பை சூறையாடிய வாலிபன்... விரக்தியில் பெண் விபரீதம்!

 
Published : Feb 02, 2018, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
500 பெண்களுக்கு கருவை சிதைத்த டாக்டர்... பெண் கர்ப்பை சூறையாடிய வாலிபன்... விரக்தியில் பெண் விபரீதம்!

சுருக்கம்

Today Special crime news Asianet

500 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூர பெண் டாக்டர்... வலை வீசும் போலீஸ்!

சுமார் 500 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் செல்வாம்பாள்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப நலத்துறை அதிகாரி தனலட்சுமி திருவண்ணாமலை டாக்டர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு உள்ளாகி உள்ள டாக்டர் செல்வாம்பாள் தேடப்பட்டு வருகிறார். 
குருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்று சோதித்த 3 ஸ்கேன் செண்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

மாப்பிள்ளை கிடைக்காதத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை...

திருச்சியில் அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால் இளம்பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சிவசங்கரி. பட்டதாரியான இவருக்கு திருமணம் முடிக்க, அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால் சிவசங்கரிக்கு அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை தான் தனக்கு கணவராக வர வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் அவர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இதுபற்றி சிவசங்கரி  பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சிவசங்கரிக்கு ஏற்கனவே, திருமண வயதை கடந்து விட்டதாலும், அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததாலும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சிவசங்கரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிவசங்கரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தியேட்டரில் வைத்து காதலியின் கர்ப்பை சூறையாடிய காதலன்...

ஐதராபாத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ‘பேஸ்புக்’ சமூகவலைதளம் மூலம் கந்தகட்லா பிக்‌ஷாபதி என்பவருடன் பழக்கம் வைத்து இருந்தார். இவர்கள் இருவரும் சமீபத்தில் ‘பத்மாவத்’ சினிமா படம் பார்க்க முடிவு செய்தனர். நேற்று ஐதராபாத்தில் உள்ள பிரசாத் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர். தியேட்டரில் கூட்டம் குறைவாக இருந்ததால் இருவரும் ஆட்கள் இல்லாத தனிமையான பகுதி இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கந்தகட்லா பிக்‌ஷாபதி தான் அழைத்து வந்த இளம்பெண்ணை தியேட்டரிலேயே கற்பழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசில் புகார் செய்தார். கந்தகட்லா பிக்‌ஷாபதி கைது செய்யப்பட்டார். 

அதைதொடர்ந்து கவனக்குறைவாக செயல்பட்டதாக தியேட்டர் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

மிக்ஸிங்குக்கு தண்ணீர் கொடுக்காததால் கொலையா!

ஹரியானாவில் இருக்கும் சிறிய மதுக்கடை ஒன்றுக்கு நரேஷ் குமார் என்ற நபர் அவரது தந்தை மஹாபிர் என்பவருடன் மது அருந்து சென்றுள்ளார். அந்த கடையில் ஏற்கனவே மது அருந்திக்கொண்டு இருந்த நான்குபேர் இவர்களிடம் மதுவில் கலக்க தண்ணீர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் தண்ணீர் இல்லை என்று சொல்லும்போது சண்டை பெரிதாகி உள்ளது. இதனையடுத்து அவர்கள் நரேஷ் குமாரை தாக்கிவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் அவர்கள் அங்கு வந்தனர். அப்போது அதில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து நரேஷ் குமாரின் கழுத்தில் சுட்டுள்ளார். இதானல் கழுத்தில் குண்டு பாய்ந்த நரேஷ் சுருண்டு விழுந்து அங்கேயே இறந்தார். அந்த நான்கு பேரில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை