கள்ளக் காதலனோடு சேர்ந்து பெத்த மகனை கொன்ற பெண்... இடைஞ்சல் செய்வானோ என நினைத்து கொடூர செயல்...

 
Published : Feb 02, 2018, 05:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
கள்ளக் காதலனோடு சேர்ந்து பெத்த மகனை கொன்ற பெண்... இடைஞ்சல் செய்வானோ என நினைத்து  கொடூர செயல்...

சுருக்கம்

The girl who killed Pettas son along with the boyfriend is a terrible act

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 1 வயது மகனை கொன்று புதைத்த  சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டம் பிவண்டி மான்கோலி கிராமத்தை சேர்ந்தவர் பிரேந்திரகுமார். இவரது மனைவி மம்தா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் ஆர்யன் என்ற மகன் இருந்தான்.

இதனை தொடர்ந்து, கணவனின் மீது இருந்த தாம்பத்ய உறவில் திருப்தியடையாத இந்த பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞருடன் மம்தாவுக்கு தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் படுக்கை அரை வரை சென்றுள்ளது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் கணவர் மற்றும் குழந்தையை தவிக்க விட்டு விட்டு மம்தா ராகேசுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.

இரண்டு மாடங்களுக்குப் பின், கடந்த வாரம் இருவரும் சொந்த ஊருக்கே கணவனின் வெட்டுக்கு பக்கத்திலேயே வந்து வசித்து வந்தார்.

இந்த நிலையில், கணவனுடன் இருந்த சிறுவன் ஆர்யன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய் விட்டான். அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவியும், அவரது கள்ளக்காதலனும் தான் தன் மகனை ஏதோ செய்து விட்டனர் என சந்தேகமடைந்த பிரேந்திரகுமார், இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் மம்தா, கள்ளக்காதலன் ராகேஷை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. பிவண்டியில் பிரேந்திரகுமார் வசிக்கும் பகுதியிலேயே மீண்டும் வசிப்பதால் குழந்தை ஆர்யனால் பின்னாளில் பிரச்சினை வரும் என்று ராகேஷ் மம்தாவிடம் கூறினார். எனவே இருவரும் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இந்த நிலையில் தான் நேற்றுமுன்தினம் மகனை வீட்டில் வைத்து விட்டு சிறிது நேரம் பிரேந்திரகுமார் வெளியில் சென்று உள்ளார். இதை கவனித்த மம்தா வீட்டிற்குள் புகுந்து ஆர்யனை கடத்தி கொண்டு ராகேஷின் வீட்டுக்கு சென்றார். அங்கு வைத்து பெற்ற மகன் என்று கூட பாராமல் மம்தா தனது கள்ளக்காதலன் ராகேஷ், அவரது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று அங்குள்ள ஒரு இடத்தில் புதைத்துள்ளது  விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை தாயே கொன்ற இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை