பெட்ரோல் டீசல் விலை குறித்து "முக்கிய தகவல்"..! டென்ஷனாக வேண்டாம்..!

First Published Feb 2, 2018, 5:32 PM IST
Highlights
PETROL AND DIESEL COST WILL BE increased


பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இனி அதிகரிக்க தான் வாய்ப்பு உள்ளது என்ற  தகவல் வெளியாகி உள்ளது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும்,கச்சா எண்ணெயிலிருந்து  பெட்ரோல் மற்றும் டீசல் சுத்திகரிப்பு செய்து பிரித்து எடுப்பதற்கு அதிக செலவு ஆவதாலும், இனி  வரும் காலங்களிலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பட்ஜெட்

நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியான ரூ.2  ரத்து செய்தும்,கூடுதல் வரியான ரூ.6 ரத்து செய்தது.

இருந்தாலும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை,மற்றும் ஏன் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி- குள் கொண்டுவர முடியவில்லை என  மக்கள் பல மாதங்களாக  தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதமாக,வட கிழக்கு  மாநிலங்களில் லிட்டருக்கு 4 ரூபாய் வரி விதிக்கப் பட்டு உள்ளது

காரணம் :

சாலை மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, இதற்கான செலவை  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பொருட்டு, இனி  பெட்ரோல் டீசல் மீதான  விலையில்  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதே தவிர குறைய வாய்ப்பு குறைவு தான் என பொருளாதார  வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும்,தமிழகத்தை எடுத்துக்கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75ஐ தாண்டியது..தற்போது 76  ரூபாயை தொட  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இதன் காரணமாக சாதாரண மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்

click me!