முதல்வரே உங்க கட்சிக்காரரை கொஞ்சம் தட்டி வையுங்கள்! அண்ணாமலை அதிரடி சரவெடி!

Published : Sep 19, 2025, 03:14 PM IST
Annamalai

சுருக்கம்

Annamalai: தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய 1,350 டன் யூரியா, மதுரை குட்ஷெட்டில் தேங்கியுள்ளது. திமுக வட்டச் செயலாளர் ஒருவர் அதிக கமிஷனுக்காக லோடு ஏற்றும் பணியை தாமதப்படுத்துவதே இதற்குக் காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல் தொடர்ந்து இடைஞ்சல் கொடுக்கும் திமுக பிரமுகரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

யூரியா மூட்டைகள் முடக்கம்

இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், திமுக வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்.

திமுக வட்டச் செயலாளர் செந்தில்

மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

ஒருபுறம், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 16.09.2025 அன்று கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார். மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 06 December 2025: Govt Job - ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
இந்த ஐந்து நாள் பயிற்சி போய்ட்டு வந்தாலே போதும்! கை நிறைய சம்பாதிக்கலாம்! உங்க லைஃப் டோட்டலா மாறிடும்!