காட்டில் மாஸ் காட்டிய வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்று...! ஏராளமானோர் அஞ்சலி...

By vinoth kumar  |  First Published Oct 18, 2018, 3:00 PM IST

சந்தனக்கடத்தல் வீரப்பனின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது. மேட்டூரில் உள்ள வீரப்பனின் நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தனர்.


சந்தனக்கடத்தல் வீரப்பனின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது. மேட்டூரில் உள்ள வீரப்பனின் நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தனர். 

தர்மபுரியில் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் அதிரடிப்படையினரால்  சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பின்னர், வீரப்பனின் உடல் மேட்டூர் அருகே அடக்கம் செய்யப்பட்டது. வீரப்பன் நினைவிடத்தில் 13-வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, வீரப்பனின் நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Latest Videos

undefined

 

இதேபோல் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், வீரப்பன் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செய்தனர். இதன் பின்னர், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வீரப்பன் இருந்தவரை கர்நாடகம், தமிழகத்திடம் பிரச்சனை செய்யாமல் இருந்தது. ஆனால் தற்போது ஒகேனக்கல் தங்களுடையது என கர்நாடகம் சொந்தம் கொண்டாடுகிறது. 

என் கணவர் உயிரோடிருந்தபோது, எந்த அரசு அதிகாரியும் ஒகேனக்கல் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள். மேகதாதுவில் அணை கட்டுகிறார்கள் என்றால், என் கணவர் இல்லை என்ற ஒரே தைரியத்தில்தான் என்று முத்துலட்சுமி குற்றம் சாட்டினார்.

click me!