தீரன் பட பாணியில் வடமாநில கொள்ளையர்களை பிடித்த சிபிசிஐடி போலீஸ்... விசாரணையில் திடுக் தகவல்கள்!!

By vinoth kumarFirst Published Oct 14, 2018, 11:19 AM IST
Highlights

சேலம் ரயில் கொள்ளை விசாரணையில் திடீர் திருப்பம்.  சேலத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த சேலம் சென்னை எக்பிரஸ் ரயிலில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான சுமார் 342 கோடி ரூபாய் அந்த ரயிலில் கொண்டு வரப்பட்டது.

சேலம் ரயில் கொள்ளை விசாரணையில் திடீர் திருப்பம்.  சேலத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த சேலம் சென்னை எக்பிரஸ் ரயிலில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான சுமார் 342 கோடி ரூபாய் அந்த ரயிலில் கொண்டு வரப்பட்டது.  கொள்ளை சம்பவம் ஒன்று 2016ம் ஆண்டு நடைபெற்றது. 

 அந்த தகவலை அறிந்த  கொள்ளை கும்பல் ஒன்று, ரயிலின் மேற்கூரையில் இரண்டடிக்கு ஒன்றரை அடி துளை போட்டு உள்ளே இறங்கி 5.75 கோடி ரூபாயினை கொள்ளையிட்டு சென்றனர் மர்ம நபர்கள். அந்த ரயில் 9ம் தேதி காலை எழும்பூர் ரயில் நிலையம் வந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது கண்டறியப்பட்டது.  ஆனால் வழக்கினை இரண்டு வருடம் நடத்தியும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. 

இந்த பயங்கரக் கொள்ளையால் திணறிய சென்னை சிபிசிஐடி போலீசார் மத்திய அமைச்சகத்தின் மூலமாக நாசாவின் உதவியை நாடியிருந்தது .  நாசா, சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 350 கிலோமீட்டர் பயணத்தை அடிப்படையாக கொண்டு சுமார் 20 புகைப்படங்களை சிபிசிஐடிக்கு கொடுத்துள்ளது நாசா. இந்த 350 கிலோ மீட்டர் தொலைவிலான பயணத்தில் சுமார் 100 செல்போன்  டவரில் பதிவான அழைப்புகளையும் ஆராய்ச்சி செய்த  சிபிசிஐடிக்கு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியானது.

இந்த புகைப்படங்களின் அடிப்படையில் இதுவரை பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 கட்டிடத் தொழிலாளிகளை கைது செய்து விசாரணை செய்து வந்தது. அதன் அடிப்படையில் மத்திய பிரதேசம் ரட்லத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோரை சென்னையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த மோகர்சிங் என்பவனே கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைதான இருவர் உள்பட 5 பேர் ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து துளையிட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். ரயிலின் மேற்கூரையை துளையிட்டு பணக்கட்டுகளை லுங்கியில் சுற்றி கொள்ளையர்கள் தப்பியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இவர்கள் மத்திய பிரேதசம் ராஜஸ்தான் டெல்லி அரியானா குஜராத் மற்றும் மகாராஷ்டரா வில் கொள்ளையில் ஈடுபட்ட பார்தி குழுவுடன் தொடர்புடையர்கள் . இவர்கள் பல மாநிலங்களுக்கு சென்று ரயில் நிலையம் அருகே தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி நோட்டமிடுவது இவர்கள் வழக்கம். இவர்கள் தமிழத்தில் கட்டிட தொழிலாளி, பலூன், பொம்மை விற்பனையாளர்கள் போல சுற்றி திரிந்து கொள்ளைக்கான இலக்கை தீர்மானிப்பார்கள் என விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

click me!