கணவனை அடித்து ரூமில் பூட்டிவிட்டு மனைவியுடன் உல்லாசமாக இருந்த போலீஸ்! புகார் கொடுக்க வந்த பெண்ணை உஷார் பண்ணி ஜல்சா

By vinoth kumar  |  First Published Oct 10, 2018, 1:47 PM IST

கணவன் - மனைவிக்கிடையே எற்பட்ட தகராறைப் பயன்படுத்தி, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டும், அதனை தட்டிக்கேட்ட கணவரை, காதல் (காவல்) ஆய்வாளர் ஒருவர் கடுமையாக அடித்து உதைத்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.


கணவன் - மனைவிக்கிடையே எற்பட்ட தகராறைப் பயன்படுத்தி, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டும், அதனை தட்டிக்கேட்ட கணவரை, காதல் (காவல்) ஆய்வாளர் ஒருவர் கடுமையாக அடித்து உதைத்த சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியைச் மலைவாசன். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். மலைவாசன்,வெள்ளிப்பட்டறை ஒன்றில் தொழிலாளியாக இருந்து வருகிறார். 

கிடைக்கும் பணத்தில் மலைவாசன், குடித்து விட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடை சண்டை எழுந்து வந்துள்ளது. இந்த நிலையில், கணவர் மலைவாசன் மீது போலீசில் புகார் கொடுக்க, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மணிமேகலை சென்றுள்ளார். அங்கு உதவி ஆய்வாளராக பணிபுரியும் கலைச்செல்வனுடன், மணிமேகலைக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.புகாரை விசாரிப்பதாக மணிமேகலையின் வீட்டுக்கு வந்த காவல் ஆய்வாளர் கலைச்செல்வன் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனை அறிந்த மலைவாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். வயதுக்கு வந்த மகள் இருக்கும்போது மனைவியின் இந்த தகாத செயலைக் கண்டித்துள்ளார். மனைவியின் செயலால் வெறுப்படைந்த மலையரசன் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். கணவன் தொந்தரவு இல்லாத நிலையில், கலையரசன், மணிமேகலை வீட்டுக்கு தங்குதடையின்றி சென்று வந்துள்ளார். 

இந்த நிலையில், மகளின் சான்றிதழ் ஒன்றை எடுப்பதற்காக வீட்டுக்கு சென்றுள்ளார் மலைவாசன். அப்போது,மணிமேகலையுடன், காவல் உதவி ஆய்வாளர் கலையரசன் இருப்பதை கண்டார். கையும் களவுமாக பிடிபட்ட அவர்களை, மலைவாசன் தட்டிக்கேட்டார். அப்போது மலைவாசனை, கலையரசன் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், மலைவாசனை வீட்டிலேயே சிறை வைத்துவிட்டு கலையரசன் செல்ல முயன்றுள்ளார். 

இதனை அப்பகுதி நபர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இதற்கு கலையரசன் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசியுள்ளார். தனக்காக இரண்டு பேர் சண்டைப் போட்டுக் கொள்வதை மணிமேகலை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டுள்ளார். ரத்தக்காயங்களோடு வீட்டில் இருந்து மீட்கப்பட்ட மலையரசன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

புகார் கொடுக்க வந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய காதல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனைவியை அபகரித்ததோடு, கணவரையும் வீட்டில் பூட்டி வைத்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

click me!