இந்த 13 மாவட்டங்களில் நாளை மிகக் கடுமையான வெயில் இருக்கும் ! 5 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் !! பயமுறுத்தும் வானிலை ஆய்வு மையம் !!

By Selvanayagam PFirst Published Jun 18, 2019, 10:26 PM IST
Highlights

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட  13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடுமையான அனல் காற்று வீசும் என்றும் முடிந்த அளவு கொது மக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம்  என்னும் கத்திரி வெயில் நிலவி வந்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்து  15 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. 

இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அடுத்த இரு தினங்களுக்கு இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை உள்பட 13 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

சில இடங்களில் அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாயு புயல் கரையை கடந்த பிறகு தான், தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து வெப்ப நிலை குறையும் என கூறப்படுகிறது.

click me!