ஆசிரியர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை? என்ன அனாதையா தவிக்க விட்டு போயிட்டியே.. கதறும் தாய்.!

Published : Jul 20, 2023, 12:05 PM ISTUpdated : Jul 20, 2023, 12:10 PM IST
ஆசிரியர் திட்டியதால் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை? என்ன அனாதையா தவிக்க விட்டு போயிட்டியே.. கதறும் தாய்.!

சுருக்கம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் கருப்பசாமி இறந்துவிட்டார்.  இவர்களுக்கு  முனீஸ்வரி என்ற முகிலா (16) என்ற ஒரு மகள் உள்ளார். முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 

ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த அரசு பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் கருப்பசாமி இறந்துவிட்டார்.  இவர்களுக்கு  முனீஸ்வரி என்ற முகிலா (16) என்ற ஒரு மகள் உள்ளார். முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை தெரியுமா? 5 மணிநேரம் கரண்ட் கட்..!

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய முனீஸ்வரி திடீரென வீட்டில் இருந்த தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த தாய் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதையும் படிங்க;-  சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அலறிய பயணிகள்.. அரிவாளால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு?

இது குறித்து அப்பகுதியில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சம்பவத்தன்று பள்ளி ஆசிரியர் திட்டியதால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும்.. தீர்மானமாக வழங்கிய இந்தியா கூட்டணி உறுப்பினர்கள்..