10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கும், 10 ஆம் வகுப்பிற்கு மார்ச் 26 ஆம் தேதியும் தேர்வு நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது.?
பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தோறும் நடைபெறும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். இதன் படி, 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது. 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவு தேதி அறிவிப்பு
அதே போல 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறுகிறது. 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என தெரிவித்தார்.
தேர்வு முடிவானது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்ளுக்கு மே 14 ஆம் தேதியும் 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவு மே 10 ஆம் தேதியும் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்