10,11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை இன்று காலை வெளியிடப்படுகிறது. அந்த வகையில் மார்ச் மாதம் மத்தியில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என எதிரிபார்க்கப்படுகிறது
10,12ஆம் வகுப்பு தேர்வு.?
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆண்டு தோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வியானது எழுந்தது. வருகிற 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே தேர்தலுக்கு முன்னதாகவே பள்ளிகளுக்கான தேர்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை பொறுத்த வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது.
இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
இதே போல 10 ஆம் வகுப்பு தேர்வானது ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. எனவே இந்ததாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதன் காரணமாக தேர்வை முன்கூட்டியே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கான தேதியை இன்று அறிவிக்கிறார்.
இதையும் படியுங்கள்