அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து 10 மடங்கு அதிக மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து 10 மடங்கு அதிக மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு அருகிறது. அன்மையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளருக்கு அதிர்ச்சி தரும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்? காவல்துறை எச்சரிக்கை
அதன்படி, அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களை காலி செய்ய ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் அந்த நோட்டீஸுக்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: குமரியில் கந்துவட்டி கொடுமையால் பேருந்து உரிமையாளர் தற்கொலை
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலத்தில் ஆக்கிரமத்தை வீடு கட்டியவர்கள் காலி செய்ய மறுத்தால் பத்து மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர் இது மனுதாக்கல் செய்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி ஆழ்ந்துள்ளனர்.