தமிழரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்? காவல்துறை எச்சரிக்கை

By Velmurugan s  |  First Published Feb 2, 2023, 5:16 PM IST

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தமிழர் ஒருவரை சுற்றி வளைத்து வடமாநில இளைஞர்கள் பணம் பறித்ததாக இணையத்தில் வீடியோ வைரலான நிலையில் காவல் துறையினர் இது தொடர்பாக விளக்கம் அளித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பொங்குபாளையம் சாலையில் தமிழரின் இருசக்கர வாகனத்தை பிடுங்கி வடமாநில தொழிலாளர்கள் பணம் பறித்ததாக வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரின் வீடியோ பதிவுடன் திருப்பூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளனர். அதில் சம்பத் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வடமாநில தொழிலாளரை இடித்து விட்டதாகவும் இதில் வடமாநில தொழிலாளரின் செல்போன் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 

செல்போன் சேதமடைந்ததற்கான பணம் கேட்ட போது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பத் பணம் கொடுத்த பிறகு இருவரும் சமரசமாக சென்று விட்டனர். இந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் தவறான தகவலுடன்‌ வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

புதுவையில் 64வயது மூதாட்டியுடன் உறவில் ஈடுபட்டு கம்பி எண்ணும் வட மாநில இளைஞர்

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுபோதையில் இருந்த தமிழக இளைஞர்களுக்கும், புகைபிடித்துக் கொண்டிருந்த வடமாநில இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையானது இரு தரப்புக்கு இடையேயான பிரச்சினை போன்று சித்தரிக்கப்பட்டு பல வீடியோகள் பரப்பப்பட்டன. மேலும் இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே போன்ற சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

click me!