திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சொத்துக்காக மனைவின் சகோதரரை கடத்திய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் வேலுச்சாமி (56). இவர் தனது மனைவி அம்பிகா மற்றும் 2 மகன்களுடன் குடியிருந்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வேலுச்சாமியின் மனைவி அம்பிகா மற்றும் அவரது தம்பி தங்கதுரை ஆகியோருக்கு பொதுவான சொத்து பெருமாநல்லூரில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலப்பிரச்சனை கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில் கடந்த 25ம் தேதி சென்னையில் இருந்து பல்லடம் வந்த தங்கதுரையை காரில் ஒரு கும்பல் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பி வந்த தங்கதுரை பல்லடம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்.15 வரை அவகாசம் நீட்டிப்பு
அதைத்தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குமரன் கார்டன் சேடபாளையம் ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி மற்றும் அவரது மகன் கோகுல் மற்றும் சிலருடன் சேர்ந்து பல்லடம் வந்த அவரது மைத்துனர் தங்கதுரையை காரில் கடத்திச் சென்று பல்லடத்தை அடுத்த அறிவொளிநகரில் உள்ள அறை ஒன்றில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததாகவும் மேலும் அங்கிருந்து காரின் மூலமாக தங்கதுரையை பெங்களூரு அழைத்துச் சென்று போதை ஆசாமிகள் மறுவாழ்வு மையத்தில் குடிக்கு அடிமையானவர் போல அங்கேயே விட்டுவிட்டு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மு.க.அழகிரி
இதையடுத்து சொத்துக்காக தாய் மாமனையே தந்தையின் உதவியோடு கடத்தி மறுவாழ்வு மையத்தில் விட்ட ரியல் எஸ்டேட் அதிபர் வேலுச்சாமி மற்றும் அவரது மகன் கோகுல் ஆகிய இருவர் மீது முதல் கட்டமாக வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் காவல் துறையினர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு சொகுசு கார் மற்றும் கடத்தலுக்கு உதவிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.