திருப்பூரில் தமிழ் இளைஞர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 வட மாநில தொழிலாளர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வேகமாக பரவத் தொடங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்புகளும் இது குறித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டன.
கோவிலுக்குள் சென்ற பட்டியலின வாலிபரை ஆபாசமாக திட்ட திமுக பிரமுகர் இடை நீக்கம்
undefined
இச்சம்பவம் தொடர்பாக வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பீகாரைச் சேர்ந்த ரஜட்குமார் மற்றும் பரேஷ்ராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 147(சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 148(ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல்), 294(பி)- பொது இடத்தில் அவதூறாக பேசி பிரச்சினை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜி20 மாநாடு புதுவையில் பிச்சைகாரர்களை துரத்தி துரத்தி பிடிக்கும் அதிகாரிகள்
மேலும் இந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட சிலரை திருப்பூர் மாநகர காவல் துறையினர் தேடி வருகின்றனர்.