திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் துரத்தி துரத்தி தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவிலான துணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். இங்கு இயங்கி வரும் தொழிற்சாலைகளில் தமிழக இளைஞர்களுக்கு நிகராக வடமாநில தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில தொழிற்சாலைகளில் தமிழக இளைஞர்களைக் காட்டிலும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற கல்லூரி மாணவர் உடல் துண்டாகி பலி
undefined
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் வெளிமாநில இளைஞர்கள் நிறுவனத்தின் அருகில் உள்ள கடையில் புகைப்பிடித்துள்ளனர். அப்போது அங்கு 4 தமிழக இளைஞர்கள் மது போதையில் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தங்கள் மீது சிகரெட் புகையை விடுவதாகக் கூறி தமிழக இளைஞர்கள் வெளிமாநில தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய ஆளுநரின் தேநீர் விருந்து; முதல்வர் பங்கேற்பு
இச்சம்பவம் நடைபெற்றது நிறுவனத்தின் இடைவேளை நேரம் என்பதால், நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக இளைஞர்களை துரத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் அப்பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டதால் இரு தரப்பையும் காவல் துறையினர் கண்டித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
அதன் பின்னர் வடமாநில தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியை தொடர்ந்துள்ளனர். அச்சம்பவத்தின் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.