திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 இடங்கள்! தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து!

By SG BalanFirst Published Mar 9, 2024, 7:56 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து இரு கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து இரு கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் மற்றும் தமிழகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். டெல்லியில் இருந்து இன்று சென்னை வருகை தந்தனர்.

Latest Videos

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் அஜய்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர். திமுக தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மூத்த தலைவர் பொன்முடி ஆகியோரும் பங்கேற்றனர்.

பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியின் புதிய படத்தை வெளியீடு! மக்கள் உதவியை கோரும் என்.ஐ.ஏ!

இதன் மூலம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

ராமநாதபுரம் தொகுதி முஸ்லீம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மதிமுகவுக்கு ஒரு தொகுதி வழங்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவைத் தொகுதி மட்டும் ஒதுக்குவதாக திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. ம.நீ.ம. சார்பில் திமுக கூட்டணிக்காக தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று கமல் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது.

மூணு மாசத்துல 40 பில்லியன் டாலர் நஷ்டம்! அசால்ட்டாக இருந்து கோட்டை விட்ட எலான் மஸ்க்!

click me!