விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெண் காவலர் ஒருவர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெண் காவலர் ஒருவர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் கனிமுத்து. இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென மயங்கி விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
undefined
இந்நிலையில் கனிமுத்துவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவருடைய இறுதி அஞ்சலியில் பங்கேற்ற காவர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் விருதுநகரில் முன்களப்பணியாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அருப்புக்கோட்டையில் செவிலியர் ஒருவரும், விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஒருவரையும் சேர்த்து இன்று ஒரே நாளில் மட்டும் அங்கு 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.