அடுத்தடுத்து பலியான உயிர்கள்... 28 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் வைத்த ஆப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 9, 2021, 10:53 AM IST
Highlights

இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்த வெடி விபத்துக்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளத்தில் இயங்கி வந்த ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தின் அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்குள், பிப்ரவரி 25ம் தேதி சிவகாசி அருகேயுள்ள காளையார்குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது. பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரித்து வந்த இந்த ஆலையில், மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட உராய்வால் விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்த வெடி விபத்துக்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 

தீவிபத்தை தவிர்க்க கூடிய பாதுகாப்பு வசதிகள் இல்லை, தரையில் பட்டாசுகளை காய வைப்பது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 84 ஆலைகளை மூட உத்தரவு பிறப்பித்தனர். அவற்றின் உரிமைத்தையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். 

click me!