அரசு எடுத்த திடீர் முடிவு…. பல கி.மீ. தூரம் பயணித்துவந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்..!

By manimegalai aFirst Published Oct 20, 2021, 6:27 PM IST
Highlights

ஐப்பசி பெளர்ணமிக்கு நாளை வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்த நிலையில் திடீரென பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி பெளர்ணமிக்கு நாளை வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்த நிலையில் திடீரென பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். தரைமட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு 4  நாட்கள் அமாவாசைக்கு 4 நாட்கள் என மாததிற்க்கு 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக சதுரகிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், பல்வேறு தரப்பினர் கோரிக்கையை பரிசீலித்து ஐப்பசி மாதப் பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. அதன்படி கடந்த 18 ஆம் தேதி முதல் வரும் 21ஆம் தேதி வரை நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எண்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேள்விபட்டதும் பல ஊர்களில் இருந்து சதுரகிரி மலைக்கு பக்தர்கள் படையெடுத்தனர். இந்தநிலையில், இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பிற்பகலில் கோயிலுக்கு வந்தவர்கள் மலையடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாலை 3 மணிக்கு மேல் வருகை தந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் ஏராளமானோர் காத்திருந்த்னர். நீண்ட நேரம் காத்திருந்தும் பக்தர்கள் மலையேற அனுமதி கிடைக்காததால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

click me!