எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சென்ற நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சென்ற நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியில் தனது பலத்தை அதிகரிக்க ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை பேராயுதமாக நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் பரப்புரை குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காத நிலையில் அதை தமக்கு சாதகமாக்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் வெற்றிக்காக தொண்டர்கள் மனக்கசப்புகளை மறவ்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கி வருகிறார்.
undefined
இந்தநிலையில் எடப்பாடியின் அறிவுரைகளை காற்றில் பறக்கவிட்டு சாத்தூரில அவர் முன்னிலையிலேயே கோஷ்டி மோதல் அரங்கேறியிருக்கிறது. தேர்தல் பணிக்காக நெல்லை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு, சாத்தூர் அருகே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இருதரப்புக்கும் இடையே ஏற்கெனவே புகைச்சல் இருந்துவரும் நிலையில் இன்று அதனை எடப்பாடி முன்பே வெளிக்காட்டிவிட்டனர். எடப்பாடியை தொண்டர்கள் வரவேற்றபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் ராஜேந்திர பாலாஜி ஒழிக என்று கோசமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜி ஆதாரவளார்கள், எதிர் தரப்பினரை தாக்கத் தொடங்கினர். அவர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் வரவேற்பு நிகழ்சி போர்க்களமாக மாறியது.
கைகலப்பில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதனிடையே, மோதல் தொடர்பாக அதிமுக கிளைச்செயலாளர் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜந்திரபாலாஜி உள்பட 11 பேர் மீது சாத்து நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.