ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது.. ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

By vinoth kumar  |  First Published Aug 25, 2021, 11:21 AM IST

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 


ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும் பள்ளியை திறக்க அனுமதி இல்லை என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த மாதத்தில் இறுதிக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

இந்நிலையில், ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

click me!