ஓய்வு பெற்ற நல்லாசிரியருக்கு ஒன்றிணைந்து விழா நடத்திய கிராம மக்கள்

By Velmurugan s  |  First Published Feb 2, 2023, 7:04 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சீனியாபுரம் பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ராஜேஷ்க்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து பணி நிறைவு விழா கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். காவல்துறை குடும்பத்தில் பிறந்த இவர், பல்வேறு முயற்சிக்குப் பின்னர் ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும், 2015 முதல் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர். 

மேலும் இவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதையும் பெற்றுள்ளார். இவர் கிராமத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை படிக்க வைப்பது, தேசிய அளவிலான கலை நிகழ்ச்சி போட்டிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வது. தொடக்க  பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தியது என மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்துள்ளார். இங்கு படித்த பள்ளி மாணவர்களை  தன் முயற்சியால் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மேல் படிப்புக்காக சேர்த்துள்ளார். 

Latest Videos

undefined

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளியை போல் தினசரி ஒரு சீருடை, ஆண்டு தோறும் கல்லூரிக்கு மரக்கன்றுகள் வாங்கிக் கொடுப்பது மூலம் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் இவர் சொந்த செலவில் தான் பணி செய்த பள்ளிகளான கிருஷ்ணன் கோவில் பள்ளிக்கு 5 சென்ட் நிலம், பிள்ளையார் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 5 சென்ட் நிலம் வாங்கிக்  கொடுத்துள்ளார்.  

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

ஊர் மக்கள் உதவியுடன் பள்ளி சுற்றுச் சுவர், கலையரங்கம் ஆகியவை கட்டியுள்ளார். இவர் பணியாற்றிய இந்தப் பள்ளியை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக இரண்டு முறை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் தலைமையாசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெறும் ராஜேஷ்க்கு ஊர் மக்கள் ஒன்று திரண்டு தங்களால் முடிந்த பணத்தைக் கொண்டு பாராட்டு விழா நடத்தினர். 

தமிழரிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்? காவல்துறை எச்சரிக்கை

மேடை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க விழா மேடைக்கு அழைத்து வரப்பட்ட தலைமை ஆசிரியருக்கு பல்வேறு தரப்பினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவரிடம் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் சார்பில் சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள 2.5 பவுன்  தங்கசெயின்  மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று  நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஓய்வு பெறும் தலைமை ஆசிரியருக்கு கிராம மக்கள் பாராட்டு விழா நடத்திய நிகழ்ச்சி சுற்று வட்டார மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!