சாத்தூரில் மதுபோதையில் இயக்கப்பட்ட கார் மோதி காவலர்கள் படுகாயம்

By Velmurugan s  |  First Published Jan 30, 2023, 4:40 PM IST

மது போதையில் இயக்கப்பட்ட கார் கட்டுப்பாட்டை மீறி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தவர்கள் மீது வேகமாக மோதிய விபத்தில் காவலர்கள் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவனைந்தபுரம் விலக்கு பகுதியில் மதுரை  - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறை சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடியில் சுழற்சி முறையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சோதனை சாவடியில் காவலர்கள் மாரீஸ்வரன்(32) வீரசிங்கம்(39) உள்ளிட்ட நான்கு காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

கோவிலுக்குள் சென்ற பட்டியலின வாலிபரை ஆபாசமாக திட்ட திமுக பிரமுகர் இடை நீக்கம்

Latest Videos

undefined

அப்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் அதி வேகமாக காவலர்கள் மீது மோதியதில் மாரீஸ்வரன் மற்றும் வீரசிங்கம் ஆகிய இரண்டு காவலர்கள் பலத்த காயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் காரை ஓட்டி வந்த மூலக்கரைபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற நபரை சாத்தூர் தாலுகா காவல் துறையினர் கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காரை ஒட்டி வந்த முத்துக்குமார் அதிக அளவு மது போதையில் இருந்தது தெரியவந்தது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

விபத்து நடந்த சம்பவம் குறித்து தகவலறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த காவலர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்த காவலர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்ப்டனர்.

click me!