என்ன ஒரு தெனாவட்டு.. ஆண்டாள் கோவில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி.. வைரலாகும் வீடியோ..!

By vinoth kumar  |  First Published May 20, 2022, 1:16 PM IST

கோவிலில் கணக்காளராக பணியாற்றி வருபவர் சுப்பையா. இவர் கோவில் ஊழியரை அவமரியாதையாக நடத்துவதாகவும், இழிவாக பேசி வருவதாகவும் ஊழியர் மத்தியில் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில், கோவிலில் காவலராக பணிபுரியாற்றும் கர்ணன் என்ற ஊழியரை கணக்காளர் சுப்பையா உதைக்கும் சிசிடிவி காட்சிகள்  வெளியாகியுள்ளன. 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஊழியர் ஒருவரை அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைக்கும் சிசிடிவி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசிக்கின்றனர். இந்நிலையில், ஆண்டாள் கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காகச் செயல் அலுவலர் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், இந்த கோவிலில் கணக்காளராக பணியாற்றி வருபவர் சுப்பையா. இவர் கோவில் ஊழியரை அவமரியாதையாக நடத்துவதாகவும், இழிவாக பேசி வருவதாகவும் ஊழியர் மத்தியில் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில், கோவிலில் காவலராக பணிபுரியாற்றும் கர்ணன் என்ற ஊழியரை கணக்காளர் சுப்பையா உதைக்கும் சிசிடிவி காட்சிகள்  வெளியாகியுள்ளன. 

அதில், கோவில் நிர்வாக அலுவலகத்தில் சக ஊழியர்களின் முன்னிலையில் கர்கணை சுப்பையா எட்டி உதைக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன. இது குறித்து விசாரணை நடத்தி, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். 

click me!