மரத்தில் பயங்கரமாக மோதிய கல்லூரி பேருந்து.. அலறி துடித்த மாணவிகளின் நிலை என்ன?

By vinoth kumar  |  First Published May 6, 2022, 12:14 PM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஶ்ரீ ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஒ.மேட்டுப்பட்டியில் திருவேங்கடத்தில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு சாத்தூர் அருகே கல்லூரி பேருந்து வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேப்ப மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. 


சாத்துதூர் அருகே தனியால் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஶ்ரீ ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஒ.மேட்டுப்பட்டியில் திருவேங்கடத்தில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு சாத்தூர் அருகே கல்லூரி பேருந்து வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேப்ப மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

Latest Videos

இந்த விபத்தில் 21க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்து அலறி துடித்தனர். உடனடியாக காயமடைந்த ஓட்டுநர் மற்றும் மாணவிகளை மீட்டு அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், படுகாயமடைந்த 6 மாணவிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய வாகனத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!