முனியாண்டிக்கும், சரஸ்வதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (32). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரஸ்வதி அதே பகுதியில் உள்ள பட்டாசு மூலப்பொருளான குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார்.
கள்ளக்காதல்
இந்நிலையில், செந்தில்குமாருக்கும், பாண்டியன் நகரை சேர்ந்த முனியாண்டி (38) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் கிடைத்தது. பின்னர் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகி வந்தனர். இதனிடையே, முனியாண்டிக்கும், சரஸ்வதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
தற்கொலை
வேலிக்கு பயன்படுத்தப்படும் கல் தூண்களை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்த முனியாண்டிக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி வீட்டிற்கு வந்த முனியாண்டி அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த சரஸ்வதியும் அதே அறையில் வேறு இடத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீஸ் விசாரணை
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்தனர். சரஸ்வதி, முனியாண்டியின் கள்ளக்காதல் இரு குடும்பத்தாருக்கும் தெரிய வந்ததால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்துது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலால் இரண்டு பேர் தூக்கில் தொங்கியநிலையில், இரண்டு பேரின் குடும்பமும் குழந்தைகளும் தற்பொது நிற்கதியாக நிற்கின்றனர்.