எங்கள் பணம் வீண்! - கேட்ட உணவு கிடைக்கவில்லை, அனைவரும் ஹிந்திகாரர்கள்! பாரத் கௌரவ் ரயில் சேவை சரியில்லை!

By Dinesh TGFirst Published May 16, 2023, 12:21 PM IST
Highlights

ராஜபாளையத்தில் இருந்து பாரத் கௌரவ் சிறப்பு ரயில் மூலம் காசிக்கு 220பேர் சென்ற பக்தர்களுக்கு வட இந்திய உணவு வழங்கப்பட்டதால் பலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பெறப்பட்ட கட்டணத்திற்கு தகுந்த சேவையும் வழங்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்திய ரயில்வே சார்பில் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் காசி, கயா, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த 5ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

மொத்தம் 800 பேர் பயணித்த இந்த ரயிலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து மட்டும் 220 பேர் சென்றனர். காசி யாத்திரை சென்றவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். இவர்களிடம் ரூ. 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்யப்பட்டது.

தமிழகம் மற்றும் கேரளா என பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற தென்னிந்தியர்களுக்கு பழக்கமான இட்லி, தோசை என தென்னிந்திய உணவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், முழுமையாக வட இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

கோயில்களுக்கு செல்லும் ஊரில் பக்தர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த அறை வசதியும் ரயில்வே நிர்வாகம் செய்து தர தவறியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

மேலும் வழிகாட்டிகளும் தமிழ், ஆங்கிலம் தெரியாத ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்கள் என்பதாலும், உடன் வந்த 2 தமிழ் வழிகாட்டிகளுக்கும் போதுமான விளக்கம் சொல்ல தெரியவில்லை எனவும் புகார் கூறியுள்ளனர்.

தங்கியிருந்த இடத்திற்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம், மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு இடையே உள்ள தூரம் அதிகமாக இருந்ததோடு, போதி போக்குவரத்து வசதியும் செய்து தரப்படவில்லை. எனவே நடக்க முடியாத முதியவர்கள் சொந்த செலவில் சென்று வந்ததற்கு ரூ. 2 ஆயிரம் வரை கூடுதலாஎ செலவளித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இதனால் கோயில்களிலும் சரிவர வழிபாடு நடத்த முடியவில்லை எனவும் யாத்திரைக்கு சென்ற வந்த பக்தர்கள் தங்கள் பணம் முற்றிலும் வீணானதாக குற்றம் சாட்டினர்.

click me!