குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற மாணவன்; சாலையின் குறுக்கே வந்த மாடால் நேர்ந்த சோகம்

By Velmurugan s  |  First Published May 10, 2023, 8:08 AM IST

சிவகாசியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக மாலை நேர உணவத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆகாஷ் நேற்று சிவகாசி திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

Tap to resize

Latest Videos

அப்போது சலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரியும் மாடுகளால் அவ்வபோது இதுபோன்று விபத்து ஏற்பட்டு வருவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திராவிட மாடல் ஆட்சி சிலருக்கு வயிற்று எரிச்சலை -ஏற்படுத்தி உள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி

சாலையின் குறுக்கே சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் பட்சத்தில் கால்நடைகளின் உரிமையாளர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மாவட்ட வாரியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதனை சில மாவட்ட நிர்வாகங்கள் முறையாக பின்பற்றாத காரணத்தால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

click me!