ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கழுத்தை அறுக்க முயற்சி செய்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதி பஜாரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடேஷ் (வயது 25) என்பவர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார்.
மேலும் தலைக்கவசம் அணியவில்லை மற்றும் வேகமாக வந்ததாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் மோட்டார் வாகனம் சட்டப்படி வழக்கு பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜாவை பொது இடத்தில் வைத்து ஆபாசமாக பேசி கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுக்க முயற்சித்துள்ளார். தர்மராஜ் கையை தடுத்து மடக்கி வாலிபரை பிடித்து கைது செய்தார்.
மேதாதுவில் அணையா? கர்நாடகா துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்
வாலிபர் அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ் இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் நகர் காவல் துறையினர் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஜாமனில் வெளிவந்த வெங்கடேஷ் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் வெங்கடேஷ் என்ற வாலிபரை குற்றவாளியாக அறிவித்து ஐந்து வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 7500 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ப்ரீத்தி தீர்ப்பளித்தார்.
காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை