விருதுநகரில் பாலத்தில் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் சிவகாசி சாலை GNபட்டி அருகே பாலத்தில் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அம்மன் கோவில்பட்டி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கோவை தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்ப வந்து கொண்டிருந்த போது கார் விருதுநகர் சிவகாசி சாலையில் அருகே ஜி.என்.பட்டி விலக்கு அருகே உள்ள பாலத்தில் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுனர், மற்றொருவர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : சிறுமிகளிடம் இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை.! ஆளுநரிடம் திங்கட்கிழமை அறிக்கை- குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
மேலும் இந்த விபத்தில் காரில் வந்த சிறுவன் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். பாலத்தில் கார் மோதிய விபத்தில் காரில் இருந்த வீரபாண்டியன் , வெற்றி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுவன் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர் காயமடைந்தனர்.
இந்த தகவல் அறீந்த, ஆமத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து போன இருவரது உடல்களும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஸ்டாலின் உண்மையான தமிழ் பற்றாளர் என்றால் இதை செய்திருக்க வேண்டும்.. தமிழிசை கடும் விமர்சனம்