பள்ளி வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதி கோர விபத்து குழந்தை உட்பட 2 பேர் படுகாயம்

Published : May 20, 2023, 03:15 PM IST
பள்ளி வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதி கோர விபத்து குழந்தை உட்பட 2 பேர் படுகாயம்

சுருக்கம்

ராஜபாளையம் அருகே முன்னாள் சென்ற பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது பள்ளி வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் அருகே மேல வரகுண ராமபுரத்தைச் சேர்ந்தவர் வனிதா. தன்னுடைய மகன் 2 வயது ராகுலுடன், உறவினரான புத்தூரைச் சேர்ந்த தங்கமாடத்தி, ஒன்னரை வயது குழந்தை, சொர்ண தர்ஷன் உள்ளிட்டோருடன் ராஜபாளையம் சென்றுள்ளார். பின்னர் 4 பேரும் பேருந்து மூலம் தளவாய் புரத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். 

ஆட்டோவை புத்தூரைச் சேர்ந்த தங்கப்பிரகாஷ் ஓட்டி சென்றுள்ளார். இவர்களது வாகனம் புனல் வேலி கண்மாய் பாலம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வேன் மீது பின் பக்கமாக ஆட்டோ பலமாக மோதி உள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். 

சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

உடனடியாக அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வனிதா, தங்கமாடத்தி, கைக் குழந்தையான ராகுல் ஆகியோர் சிறிய காயங்களுடன் தப்பிய நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தங்கப்பிரகாஷ் மற்றும் ஒன்றரை வயது குழந்தை சொர்ண தர்ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தளவாய்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசியில் ஊசி மூலம் பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ தர்புசணி பழங்கள் அழிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!