கன்னியாகுமாரி டூ கோயம்புத்தூர் 17 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தை இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் அகிலன் (45) ஓட்டி வந்துள்ளார். பேருந்து சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தனியார் சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து துக்கத்தில் இருந்த 17 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கன்னியாகுமாரி டூ கோயம்புத்தூர் 17 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தை இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் அகிலன் (45) ஓட்டி வந்துள்ளார். பேருந்து சாத்தூர் நான்கு வழிச்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க;- LIC: சென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து - போராடிக் கட்டுப்படுத்திய தீயணைப்புப் படை
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரையும் எழுப்பி பேருந்தில் இருந்து கீழே பத்திரமாக இறக்கி விட்டுள்ளனர். உடனே தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க;- ஏப்ரல் 4 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைக்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அணைத்து இடங்களில் மளமளவென பரவி கொழுந்து விட்டு எறிய தொடங்கியது. பின்னர், நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிஷ்டவசமாக 17 பேர் உயிர் தப்பினர்.