புளிய மரத்தில் மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே தம்பதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

By vinoth kumar  |  First Published Sep 19, 2022, 2:35 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளதத்தில் உயிரிழந்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளதத்தில் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் MPK புதுப்பட்டி பகுதியைச் சார்ந்த சந்தானகிருஷ்ணன்(55).  இவர் ஸ்பின்னிங் மில் மற்றும் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி(46). இவரது மகள் சிந்துஜா ஆகியோர் மதுரை சென்று விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. கார் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே  வந்துது கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கொரோனாவை விட கொடூரமாக பரவும் H1N1! ஸ்கூலுக்கு மீண்டும் விடுமுறை?அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சிகள்

இந்த விபத்தில் சந்தானகிருஷ்ணன், ராமலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மகள் சிந்துஜா சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் காயமடைந்த சிந்துஜாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த இருவரிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  திருமணமான 6 நாளில் புதுப்பெண் தற்கொலை.. அடுத்த சில நிமிடங்களில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!

click me!