ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சொந்த கட்சி நிர்வாகிகளிடம் பண மோசடியில் ஈடுபட்ட பாஜக மாவட்டத் தலைவர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார், கலையரசன். சுரேஷ்குமார் விருதநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராகவும், கலையரசன் மாவட்டச் செயலாளராகவும் உள்ளனர். இதே பொன்று சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவராக இருப்பவர் பாண்டியன். இவருக்கு கார்த்திக் மற்றும் முருகதாஸ் என்று இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பாண்டியனை சந்தித்த சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் உங்கள் இரு மகன்களுக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். கார்த்திக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், முருகதாஸ்க்கு தெற்கு ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.11 லட்சத்தை வாங்கியுள்ளனர்.
Crime News: பள்ளிப்பருவ காதலால் பொதுத்தேர்வு எழுதிய மாணவன் தலை துண்டித்து கொடூர கொலை
பணம் வாங்கி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் விரக்தியடைந்த பாண்டியன் சம்பவம் குறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தவணை முறையில் சில காசோலைகளை பாண்டியனிடம் அளித்துள்ளனர். ஆனால் அந்த காலோலைகள் மூலம் மொத்தமாக ரூ.2 லட்சம் மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள காசோலைகள் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. மேலும் மீதத் தொகை ரூ.9 லட்சத்தை கேட்ட போது இருவரும் சேர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
மகளின் மரணத்தால் துக்கம் தாங்காமல் தந்தை தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சியில் உறவினர்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விருதுநகர் குற்றப்பிரிவு காவல் துறையினர் கலையரசனை கடந்த டிசம்பர் மாதமே கைது செய்தனர். மேலும் சுரேஷ் குமாருக்கு உச்சநீதிமன்றம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் செலுத்துமாறு உத்தரவிட்டு ரொக்க ஜாமீன் வழங்கி இருந்தது. ஜாமீனுக்கான காலக்கெடு கடந்த 12ம் தேதி நிறைவடைந்த நிலையில் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.