6 மாதங்களாக முதலிரவு நடக்காமல் ஏங்கிய மனைவி... தந்தையுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்ன 'மாமா' கணவர்..!

By vinoth kumar  |  First Published Nov 27, 2019, 1:32 PM IST

மாப்பிள்ளை குடும்பத்தினரிடம் முறையிட்ட போது மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, சரவணனின் சகோதரிகள் உள்ளிட்டோர் சேர்ந்து, உனக்கும், சரவணனுக்கும் முதலிரவு நடக்காது என பானுவிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பானு கதறியபடி தனது பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார்.


திருமணமாகி பல மாதங்களாக முதலிரவு நடக்காத நிலையில், முதலிரவுக்கு அழைத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

விருதுநகர், கட்டையாபுரம், ஆவலப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். இவருக்கும், திருநெல்வேலி, சத்திரத்தை சேர்ந்த பானுவுக்கும் (31) கடந்த ஜூன் 6-ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது திருமண சீர் வரிசையாக நகைகள், பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், திருமண நடந்த நாள் முதல் இன்று வரை முதலிரவு நடக்கவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

இது தொடர்பாக மாப்பிள்ளை குடும்பத்தினரிடம் முறையிட்ட போது மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, சரவணனின் சகோதரிகள் உள்ளிட்டோர் சேர்ந்து, உனக்கும், சரவணனுக்கும் முதலிரவு நடக்காது என பானுவிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பானு கதறியபடி தனது பெற்றோர்களிடம் முறையிட்டுள்ளார். 

பெண் வீட்டார் இதுதொடர்பாக மருமகன் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் திமிராக ஆண்டுக்கணக்கில் முதலிரவு நடக்காதவர்கள் இருக்கிறார். அதற்கு என்ன அவசரம் என்றனர். மேலும், கணவர் சரவணன், மனைவியிடம், எனது தந்தை மூக்காண்டிக்காகத்தான் உன்னை திருமணம் செய்துகொண்டேன். வேண்டுமென்றால் அவருடன் உல்லாசமாக இருந்துகொள். என்னை தொந்தரவு செய்யக்கூடாது என ஆணவத்தின் உச்சத்தில் அசிங்கமாக பேசியுள்ளார். இதனையடுத்து கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். 

உடனே இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பானு புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் கணவர் சரவணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tik Tok-ல் புள்ளிங்கோ நடத்திய நிஜ கல்யாணம் .. சீரழிவுக்கு காரணமாகும் அதிர்ச்சி வீடியோ..!

click me!