எமனாக மாறிய நாய்... ஹெல்மெட் அணிந்தும் போலீஸ் உயிர் பறிபோன பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Nov 21, 2019, 11:43 AM IST

நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் தலை மோதியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் காதில் ரத்தம் வழிந்ததால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 


விருதுநகர் அருகே தலைக்கவசத்தை முறையாக அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் தடுப்புக் கம்பியில் தலை மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் சாம்பிரேம் ஆனந்த் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பணி நிமித்தமாக முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது குறுக்கே நாய் வந்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனால், நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் தலை மோதியதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் காதில் ரத்தம் வழிந்ததால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தலைக்கவசம் அணிந்திருந்தபோதும் அதனை கழுத்துடன் இணைக்கும் சின் ஸ்ட்ராப் எனப்படும் பாதுகாப்புப் பட்டையை அவர் பொருத்தாதே தலையில் காயம் ஏற்படக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

click me!